பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நடைப்பெற்ற சிறப்பு பூஜை..
புதுச்சேரி அருகே பஞ்சவடி பகுதியில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, கோவிலில் உள்ள ராமர் சன்னதியில் கோ-பூஜைகள், விசேஷ யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 4 மணி அளவில் கோவிலில் உள்ள ஸ்ரீராமர் பாதுகைக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், மஞ்சள் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. புத்தாண்டு தின சிறப்பு பூஜைகளையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்ட்டது. விஸ்வரூப ஆஞ்சநேய பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்ற்னர்.
No comments