பழமை வாய்ந்த அருள்மிகு காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் கோ பூஜையுடன் நடைபெற்ற மார்கழி மாத சிறப்பு பூஜை..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் கைலாசநாதருக்கு கோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கியது தொடர்ந்து மூலவர் கைலாசநாதருக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கைலாசநாதர் மகாதீபாரதனையும் நடைபெற்றது இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமங்கலி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் பசுவை சுற்றி வந்து மலர் தூவி சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments