இளம் விவசாய விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி புதியதாக கண்டுபிடித்துள்ள லெமன் நறுமண மிளகை சபாநாயகர் செல்வம் அறிமுகப்படுத்தினார்.
புதுச்சேரி, கூடப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடபதி, ஆராய்ச்சியின் மூலம், கனகாம்பரத்தில் பூவில் பல நுாறு வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். இந்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மகள் ஸ்ரீலட்சுமி. 32; எம்.பி.ஏ., பட்டதாரி. ஸ்ரீலட்சுமி, தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இதன் விளைவாக, ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கினார். ஆரஞ்சு கொய்யா செடியை பிரதமர் மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா செடியை, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி பெயரிலும் அறிமுகப்படுத்தினார்.
மேலும், புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட இரண்டு அத்தி ரக செடிகளை உருவாக்கினார். காய்க்காத மிளகு செடிகளை காய்க்க வைப்பதற்காக இயற்கை முறையிலான கரைசல் ஊக்கியை கண்டுபிடித்தார். தற்போது லெமன் சுவையில் நறுமண மிளகை புதிதாக உருவாக்கி அசத்தியுள்ளார். இதனை சட்டப்பேரவையில் சபாநாயகர் செல்வம் அறிமுகப்படுத்தி வைத்து,இளம் விவசாய விஞ்ஞானி ஸ்ரீமதியை பாராட்டினார்.
No comments