சீர்காழியில் தகராறில் மாமனாரை கொலை செய்த மருமகன் கைது...,, மயிலாடுதுறை எஸ் பி ஸ்டாலின் நேரில் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). மாற்றுதிறனாளியான இவர் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இவரது மகள் ஆஷா (28) இவரது கணவர் ராமநாதபுரம் மாவட்டம் நாச்சி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (30) .இந்நிலையில் கொத்தனார் வேலை செய்து வரும் கார்த்தி கடந்த சில மாதங்கள் மாமனார் ரவிக்குமார் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கார்த்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து ரவிக்குமார் காத்திடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதில் கார்த்தி மாமனார் ரவிக்குமாரை தள்ளிவிட்டதில் அருகில் இருந்த அம்மிக்கல்லில் ரவிக்குமார் விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் உதவி ஆய்வாளர் காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மாமனாரை கொலை செய்து தப்பி ஓட முயன்ற மருமகன் கார்த்தியை சீர்காழி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments