டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழ்ச் சங்கத் தலைவர் மார்க்கோனிக்கு "மண்ணின் மைந்தர்" விருது...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டம் நடைபெற்றது. சீர்காழி புறவழிச்சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் "நினைத்ததை முடிப்பவன்" என்ற தலைப்பில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் பாலாஜி, டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலர் வினோத், இணைச் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் நாகமுத்து முன்னிலை வகித்தனர்.விழாவில் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்ஷன், பல்சுவை சின்னத்திரை நடிகர் சுட்டி.அரவிந்த் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பல்வேறு திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வரும் தமிழ் சங்கத் தலைவர் மார்கோனியின் சேவையை பாராட்டி "மண்ணின் மைந்தர்" என்ற விருதை வழங்கி பாராட்டபட்டார். அவரது தாய் நகர்மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பனையும் விழா மேடையில் கௌரவித்தனர். தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்றது இதில் முன்னாள் , சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்று கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
No comments