Breaking News

நகை அடகு கடை மற்றும் ஜுவல்லரி உரிமையாளர்களுடன் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆலோசனை..

 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சீர்காழி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பங்கேற்று பேசும் போது நகை மற்றும் அடகு கடைகளில் பாதுகாப்பு கருவி கண்டிப்பாக ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு கதவுகள் அமைக்க வேண்டும் நகை மற்றும் அடகு கடைகளில் கண்டிப்பாக உறுதியான ஸ்ட்ராங் ரூம் அமைத்து பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எச்சரிக்கை அலாரம் அமைத்திருக்க வேண்டும் அடகு கடைகளில் பழைய லாக்கர்களின் மாற்றி புதிய வகை கோத்ரேஜ் லாக்கர் உடனடியாக பொருத்தப்பட வேண்டும் தனியாக காவலாளியை நியமித்து கண்காணிக்க வேண்டும் கடையில் பணியாற்றும் நபர்களின் முழு விவரங்களையும் உறுதிப்படுத்தி காவல் நிலையத்திற்கு ஒரு நகல் வழங்க வேண்டும் கடையின் உள்ளே வருபவர்கள் கேமராவில் பதிவு செய்யும் வகையில் நான்கு பக்கங்களிலும் தொடர்ந்து தானாகவே பதிவு செய்து கொண்டிருக்க கூடிய வீடியோ கேமராக்களை பொருத்த வேண்டும் கடையில் கொள்ளையர்கள் நுழைந்து குற்ற செயல்களில் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்தமாக ஒலியட்பக் கூடிய சதுரங்களை பொருத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி இவைகளை உடனடியாக கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது இந்த கூட்டத்தில் சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் திருவெண்காடு புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!