ஆம்பூர் அருகே போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயங்கி வரும் ஆனைக்காரர் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மாதனூர் அடுத்த பாலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.,
இந்த நிலையில் இன்று ஏழாவது நாள் சிறப்பு முகாமில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் மாணவர்கள் பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் இதில் சம்பத்குமார் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கலந்துகொண்டு துவங்கி வைத்தார் மேலும் இதில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆலி ஜனாப். ரபிக் அஹமத் சாஹைப் தலைமை தாங்கினார்.
நாட்டு நலப்பணி கோட்ட அலுவலர் நிகேஷ் வரவேற்றார் முடிவில் நாட்டு நல பணி உதவி திட்ட அலுவலர் ஆலி ஜனாப் முகமது பாஷா நன்றியுரை கூறினார் மேலும் இந்நிகழ்வில் அப்ப பள்ளி மாணவர்கள் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்.
No comments