Breaking News

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பொதுக்குழு! மூன்று ஆண்டுக்கான (2025-2027) புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

 


ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் மு.ஜாமல்தீன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது வரவேற்புரையாற்றினார்.

எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தில் மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களா மாநில செயற்குழு உறுப்பினரும் கோவை மண்டல தலைவருமான கே.ராஜா உசேன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும் கோவை மண்டல செயலாளருமான M.E.அப்துல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தி சிறப்புரையாற்றினார்கள்.

இப்பொதுக்குழுவில் 2022-2024 ஆண்டுக்கான செயற்பாட்டறிக்கை மாவட்ட செயலாளர்கள் க.முனாப், அ.சாகுல் ஹமீது ஆகியோரால் மாவட்ட பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இப்பொது குழுவில் அடுத்த மூன்றாண்டுக்கான (2025-2027) 

ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக - S.அப்துல் ரஹ்மான்

மாவட்ட நிர்வாக பொதுச்செயலாளராக - அ.சாகுல் அமீது

மாவட்ட துணைத்தலைவராக -குறிஞ்சி.பாஷா

மாவட்ட செயலாளராக - க.முனாப்

மாவட்ட பொருளாளராக - H.முகமது ஜாபீர்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக - தளபதி K.S.பசீர் மற்றும் M.முகமது ஹசன் அலி

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து புதிய மாவட்ட தலைவர் S.அப்துல் ரகுமான் நிறைவுரையாற்றினார்.

இறுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அ.சாகுல் நன்றியுரையாற்றினார்.

அனைத்து புதிய நிர்வாகிகளில் பணிகள் சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பூரன உடல் ஆரோக்கியத்தை தந்திடவும், சமூகப் பணிகளுக்கு இறைவன் உதவிடவும் பிரார்த்திக்கிறேன் என உரையாற்றினார்.

No comments

Copying is disabled on this page!