Breaking News

எஸ். எஸ். என். இறகுப்பந்து அகாடமி சார்பாக மாநில அளவிலான முதல் இறகு பந்து போட்டி சீர்காழி என். ஜி. ஓ .உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எஸ். எஸ். என். நடராஜன் பிறந்தநாளை முன்னிட்டு எஸ். எஸ். என். இறகு பந்து அகாடமி நடத்திய மாநில அளவிலான முதல் இறகு பந்து போட்டி சீர்காழி என். ஜி. ஓ. உள்விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியானது 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் என தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பாண்டி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள். இந்த விளையாட்டுப் போட்டியில் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். எஸ். என். ராஜ்கமல் மற்றும் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஆதித்யா ராஜ்கமல் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் நிர்வாக அலுவலர் சீனிவாசன், பள்ளியின் முதல்வர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். எஸ். எஸ். என். இறகுப்பந்து அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வினோத், பயிற்சியாளர்கள் கணேஷ், மணி ஆகியோரின் மேற்பார்வையில் இப்போட்டியானது நடைபெற்றது. மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், ஞானசீலன், செல்லதுரை மற்றும் எஸ் .எஸ். என். இறகு பந்து அகாடமியின் உறுப்பினர்கள் வெங்கட்ராமன், ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் SSN இறகு பந்து அகாடமி, மயிலாடுதுறை MKN இறகு பந்து அகாடமி, காரைக்கால் F2B இறகு பந்து அகாடமி, தஞ்சாவூர்ASE இறகு பந்து அகாடமிகளை சேர்ந்த 13,15,17 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!