ராகுல் காந்தி தேசிய பேரவை துணைத் தலைவர் திருவேங்கடம் பிறந்தநாளையொட்டிஏழை எளிய மக்களுக்கு வேட்டி,சேலை, உணவு..
புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் பேரவையின் துணைத் தலைவரும, காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான திருவேங்கடம் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ சேகர் தலைமையில் பெருமாள் கோவில், கௌசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்ணா சாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவேங்கடத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி,சேலை,உணவு உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தயாளன், ரவிச்சந்திரன்,சுகுமாறன்,அமுதரசன்,கோவிந்தன்,பிரபு,சங்கர்,பாபு, கிருஷ்ணமூர்த்தி, புஷ்பராஜ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments