ரேஷன் கடையை திறந்து வைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் சுமார் 175 குடும்பங்கள் ரேஷன் அட்டை வைத்துள்ளனர் இவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் காட்டைக் கடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
இவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக இது போன்ற மிகுந்த சிரமத்துடன் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர் சுமார் 175 குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் ஊரில் இருந்து ரேஷன் கடைக்கு செல்ல 5 கிலோமீட்டர் தூரம் சென்று வருவதால் இடையில் காட்டுப்பகுதியில் யானை, சிறுத்தை மற்றும் கரடி தொல்லையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அரசு அதிகாரிகள் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர் மேலும் இடத்தைத் தேர்வு செய்யப்பட்டு வாகனங்கள் திரும்புவதற்கான இடங்களையும் தயார் செய்து சாலை அமைத்து தயார் செய்து தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை மாவட்ட அலுவலர் (டி எஸ் ஓ ) மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பொதுமக்களின் நலன் கருதி யானை,சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகின்றார்கள் எனவே பொதுமக்களுக்கு ஏதுவாக ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயனடும் வகையில் வழிவகை செய்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் பணிவான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் ரேஷன் கடையை திறந்து வைத்து யானை, கரடி மற்றும் சிறுத்தை தொல்லைகளில் பீதிடைந்துள்ள பொதுமக்களின் பயம் மற்றும் உயர் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments