கோடி கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்.? அரசு ஊழியர்கள் சம்மேளனம் எச்சரிக்கை.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர் சம்மேளனத்தின் கௌரவ தலைவர் பிரேமதாசன்..
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனராக ஸ்ரீராமுலு பொறுப்பு ஏற்றது முதல் சுகாதாரத் துறையில் பல்வேறு முறைகேடான பணி நியமனங்கள் இடமாற்ற கொள்கையை முற்றிலும் புறக்கணித்து பல்வேறு இடமாற்ற உத்தரவுகள் என்பது சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது, அது இன்றளவும் தொடர்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் சுகாதாரத் துறையில் முறைகேடான பணி நியமனங்கள் மற்றும் முறைகேடுகள் NHM யில் ஸ்ரீராமுலு மற்றும் லஷ்மி ஆகியோரின் சிண்டிகேட் இருவரும் ஊழல் முறைகேடுகள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறிய அவர் முறைகேடான முறையில் பணி வாய்ப்பு பெற்றவர்களை பாதுகாப்பது மற்றும் பதவி உயர்வு வழங்க துடிப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் மற்றும் தொடர்ந்து இடமாற்ற கொள்கையை மீறி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் இவர்களது ஊழலை மறைப்பதற்கு நீதிமன்றத்தில் கூட தவறான ஆவணங்கள் தயார் செய்து தவறு செய்துள்ளவர்களை காப்பாற்றுவதற்கு நிர்வாகம் முயற்சித்து வருவதாக தெரிவித்த அவர் சுகாதாரத் துறையில் தற்போதைய செயல்பாடுகளுக்கு எதிராக நான்கு பிராந்தியங்களிலும் ஊழியர்களை திரட்டி போராட்டம் நடத்த அரசு ஊழியர் சம்மேளணம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் தரமற்ற மருந்துகள் தர மற்ற எல்இடி டி.வி, தேவைக்கு அதிகமான வாடகை வண்டிகள் செயல்படுத்தப்படாத திட்டங்கள், செயல்படுத்தியதாக ஆவணங்கள் தயார் செய்து கோடி கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரித்தார்.
No comments