ஓய்வு பெற்ற அதிகாரிக்கு மீண்டும் பணி வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (PRTC) ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ரங்கசாமி என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் பிஆர்டிசி தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் வேலய்யன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,50கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற அதிகாரிக்கு மீண்டும் பணி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தொடர்ந்து ஊழல்,முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments