Breaking News

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை காரணமாக பூக்கள் மற்றும் பன்னீர் கரும்பு விலை உயர்வு..

 


பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கான பொருட்கள் விற்பனை கடந்த சில நாட்களாக புதுச்சேரி மார்க்கெட், உழவர் சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. பொங்கலுக்கு தேவையான பொருட்கள் உயர்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.பொங்கல் வைக்க பயன்படுத்தும் மண் பானை சிறியது ரூ. 60, நடுத்தர பானை ரூ. 120, பெரிய பானை ரூ. 350க்கு விற்பனையானது. மண் சட்டி ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டது.


அதுபோல் மஞ்சள் கொத்து ரூ. 30 முதல் 50க்கு விற்பனையானது. பன்னீர் கரும்பு ஜோடி ரூ. 80 முதல் ரூ. 100 வரையிலும், 20 கரும்பு கட்டு ரூ. 600 முதல் ரூ. 800க்கு விற்பனை செய்தனர்.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 120க்கு விற்பனையான மஞ்சள் சமாந்தி நேற்று ரூ. 200 முதல் ரூ. 250 வரை விற்பனையானது. மல்லிகை 4,000, அரும்பு 3,000க்கும், காக்கட்டான் 1,200, கனகாம்பரம் 8,00, அரளி 360, பட்டன் ரோஸ் 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் காய்கறிகளை விலையும் கிடுகிடுவன உயர்ந்துள்ளது.

No comments

Copying is disabled on this page!