கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ10.000 நிதி உதவி உள்ளிட்ட நிவாரண உதவிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா .எம்.முருகன் வழங்கி ஆறுதல்..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி ஊராட்சி மேட்டு மிஷின் தெருவை சார்ந்த சாந்தகுமாரி குடும்பத்தினர் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.இவர்களது கூரை வீடு நேற்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எறிந்ததில் வீடு முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் அடைந்தது இதனால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சாந்தகுமாரி குடும்பத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் அரிசி வேட்டி சேலை காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் அப்போது பாதிக்கப்பட்ட சாந்தகுமாரி குடும்பத்தினர் தங்களுக்கு அரசு தரப்பில் வீடு வழங்க வேண்டும் மேலும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
No comments