பூம்புகார் சட்டமன்றத் தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆகியோர் ஏற்பாட்டில் பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் செம்பனார் கோவிலில் அண்ணா மண்டபத்திலும் திருக்கடையூரில் தனியார் திருமண மண்டபத்திலும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம். முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழராஜன் கலந்து கொண்டு பாக முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
இதில் செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் ,ஜி என்.ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், மற்றும் திமுக நிர்வாகிகள் பாக முகவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments