400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பக்கெட்டுடன் கூடிய பொங்கல் தொகுப்பு..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியின் 21 வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெரு,பனமங்கலம், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் அறிவுறுத்தலின் படி, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி ஏற்பாட்டில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் ,பிஸ்கட் பாக்கெட், ஏலக்காய் உள்ளீட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய உங்கள் பரிசுத் தொகுப்பு பக்கத்துடன் அனைவருக்கும் வழங்கப்பட்டது.அப்பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன் வழங்கினார்.முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரமோகன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஷ், ரமாமணி, பொருளாளர் மதிவாணன் மற்றும் பணமங்கலம் ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments