தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
உழவர் திருநாளாம், பொங்கல் பண்டிகை தைத்திங்கள் 1ஆம் நாள் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் கரும்புகளால் தோரணம் கட்டப்பட்டது. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாழை இலையில் காய்கறி, பழங்கள் மற்றும் மஞ்சள் குலையுடன் படையலிட்டு திருவிளக்கேற்றி, பின்னர் பாரம்பரிய முறைப்படி அடுப்பு வைத்து மண் பானையில் பெண் வழக்கறிஞர்கள் பொங்கலிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் தனசேகர் டேவிட் தலைமை வகித்தார். செயலாளர் செல்வின் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தெய்வதொல்காப்பியன், இணை செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சார்லஸ், கார்த்திகேயன், முருகன், ரமேஷ் செல்வகுமார், செண்பகராஜ், ஸ்ரீநாத் ஆனந்த், விக்னேஷ், நான்ஸி ஷோபனா ஜெனிபர், தமிழ்செல்வி மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
No comments