தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா தமிழர் திருநாள் விழா..
புதுச்சேரி மாநிலம்,தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் துணை முதல்வர் பொறுப்பு வகிக்கும் மனோன்மணி தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் வரதராஜுலு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிவசங்கரி வரவேற்புரை வழங்கினார் . விரிவுரையாளர் மணிகண்டன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழர் திருநாள் பற்றி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். விரிவுரையாளர் கவிதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கல் பொங்கி மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
No comments