Breaking News

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடிய காவல்துறையினர்.


2025 ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இணைந்து பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி பேருந்து பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்று  கொண்டாடி மகிழ்ந்தார்கள்.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தேவாலயம் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது உளுந்தூர்பேட்டை  பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளும் ஆங்காங்கே புத்தாண்டு கொண்டாட்டங்களும் வெகு விமர்சையாக நடைபெற்றன.


உளுந்தூர்பேட்டையில்   புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நகரத்தின் மையப் பகுதியான பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன்  தலைமையிலான காவல்துறையினர்  அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து பேருந்து பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் கேக் வழங்கி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். 

No comments

Copying is disabled on this page!