புதுச்சேரியில் அதிகாலை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழக காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை..
விழுப்புரம் அருகே உள்ள முட்டைத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்.காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பானம்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சந்திரன் என்பவருடைய வாடகை காரில் தனது மனைவி ஏஞ்சலின்,தங்கை சுசிலா,மகன் பிரசன்னா,மகள் ஷானிபர்லி(12) ஆகியோருடன் காரில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கார் மதகடிப்பட்டு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் விழுப்புரம் மாவட்டம் எல்.ஆர் பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவர் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவர் உடன் காரில் வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக 2 காரும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டதில் கதிரவன், முகிலன்,சந்திரன், பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
இதில் சுசிலா, பிரசன்னா,ஏஞ்சலின், ஹானி பர் ஆகியோர் பலத்த காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments