புதுச்சேரியில் அதிகாலை வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் குறித்து போலிசார் விசாரணை..
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட வாஞ்சிநாதன் வீதி உள்ளது.இன்று அதிகாலை 5 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது.பயங்கர சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, தெரு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தொகுதி சுயேட்சை எம்எல்ஏ நேரு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பெரியகடை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும்,அங்கு சிதறி கிடந்த துகள்களை சேகரித்ததுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரியில் அதிகாலை வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments