புதுச்சேரியில் தவறவிட்ட மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு..
ஆந்திராவை சேர்ந்த வினோத், லதா ஆகியோர் கடந்த 14ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மணி பர்சை தவறவிட்டனர். அதில், 8,000 பணமும், 11 கிராம் நகைகள் இருந்தது.
புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே, ஆம்பூர் சாலை, பழைய சட்ட கல்லுாரி வளாகம் அருகே கண்ணாடி விற்பனை கடை நடத்தி வரும் முரளி என்பவர், கடையின் எதிரே கீழே கிடந்த மணி பர்சை கண்டெடுத்து, ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தார்.
இதையடுத்து, போலீசார் மணிபர்சை தவறவிட்ட லதா மற்றும் வினோத் ஆகியோரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து, பணம் மற்றும் நகைகளை ஒப்படைத்தனர். மேலும், மணிபர்சை ஒப்படைத்த முரளிக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.
No comments