Breaking News

பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய தமிழக நபரை கைது செய்த போலீசார்,அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

 


புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள கலித்தீர்த்தால்குப்பம் வி.கே நகரை சேர்ந்தவர் ரகு(44).கூலி தொழிலாளி. நேற்று முன் தினம் தனது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு தலைமையிலான போலீசார் மதகடிப்பட்டு மேம்பாலம் அருகில் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது,அந்த வழியாக குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 அப்பொழுது அவர் ஓட்டி வந்தது கலிதீர்த்தால்குப்பத்தில் திருடிய மோட்டார் சைக்கிள் என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விழுப்புரம் மாவட்டம் மருதூர் வெங்கடேசன்(49). என்பதும், புதுச்சேரி ஒதியஞ்சாலை, ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் 2 மோட்டார் சைக்கிள் திருடியதாக ஒப்புக்கொண்டார். 

 திருடிய மோட்டார் சைக்கிளை விழுப்புரம் அருகே உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மெக்கானிக் அஜித்(27) என்பவரிடம் விற்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து திருபுவனை போலீசார் அஜித்தை கைது செய்து அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை கைப்பற்றினார்கள்.

 திருடு போன 3 மோட்டார் சைக்கிளை கைப்பற்றி இருவரையும் கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தார்கள்.கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 15 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!