Breaking News

ரெட்டியார்பாளையம் பகுதியில் கடையை உடைத்து பணம் திருடிய பிரபல திருடனை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

 


புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் ராஜா முகமது என்பவர் ஏசி சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். நேற்று இரவு கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனதாக ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் ரவிக்குமார் என்கிற ஓகை குமார்(68) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனை அடுத்து ஓகை குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!