புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடி சென்ற நபரை போலிசார் கைது செய்தனர்.
புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது டிராக்டர் காணாமல் போனதாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் தியாகராஜன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமயிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்,அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில்,சீர்காழி- புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் டிராக்டரை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பின் தொடர்ந்து வரதராஜனை போலீசார் கைது செய்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான டிராக்டரை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
புகார் அளித்த 5 மணி நேரத்தில் திருடனை பிடித்த உருளையன்பேட்டை போலீசாரை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணன் வெகுவாக பாராட்டினார்.
No comments