புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு மது கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மடுகரை - பட்டம்பாக்கம் சாலையில் ரோந்து சென்றனர். அந்த வழியாக வந்த தமிழக பகுதியை சேர்ந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, தமிழக பகுதியான உளுந்துர்பேட்டையைச் சேர்ந்த குமாரவேல் 38, மோகன் 42, பன்ருட்டியைச் சேர்ந்த அருள் 40, மோகன்பாபு 45, சரவணன், 39, ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, கலால் துறையில் ஒப்படைத்தனர்.
No comments