Breaking News

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளோடு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெல்லை மாவட்டத்தின் சார்பில் களக்காடு சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட சூறைக் காற்றினால் ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்துவிட்டது.  இந்த பகுதியில் விவசாயங்களை சேதப்படுத்துகின்ற காட்டுப் பன்றிகள், மற்றும் கூட்ட யானைகளால் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்திருக்கிறது. சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கேட்டும் காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுக்கவும், கூட்ட யானைகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரட்டிடவும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளோடு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. 


நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.சடையப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் பி.பெரும்படையார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நெல்லை மாவட்ட கன்வீனர் தோழர் கே.முருகன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.ஏ.பி.பாலன் மற்றும் களக்காடு மஞ்சு விளையை சேர்ந்த விவசாயிகளான சிலிகேஷ்,சிம்சோன் துரை, செல்வின் துரை மற்றும் ஆண்கள், பெண்கள் என  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!