பகுதிநேர நியாயவிலைக்கடை: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.!
தூத்துக்குடி திரவியரத்தினநகரில் பகுதிநேர நியாயவிலைக்கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்துவைத்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் மடத்தூர் முழுநேர நியாயவிலைக் கடையிலிருந்து, திரவியரத்தினநகர், பால்சன்நகர், முருகேசன்நகர், பகுதிகளை உள்ளடக்கிய 220 குடும்ப அட்டைகளை கணக்கில்கொண்டு திரவியரத்தினநகரில் பகுதிநேரக் நியாயவிலைக் கடை உருவாக்கப்பட்டது. இந்த நியாயவிலைக்கடையினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதில், தூத்துக்குடி துணைப்பதிவாளர் சுப்புராஜ், தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் கலையரசி, மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் சாம்டேனியல்ராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் இசக்கிராஜா, கண்ணன், வட்டச்செயலாளர் பொன்பெருமாள், அவைத்தலைவர் செல்வம், வட்டப்பிரதிநிதிகள் இளங்கோ, கணேசன், பேச்சிராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments