வேறு பணிகளுக்கு ஆலை வளாகத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம்..
புதுச்சேரி- கடலூர் சாலையில் பிரெஞ்சு காலத்தில் தொடங்கப்பட்ட ஏஎப்டி ஆலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக மூடப்பட்டது.ஏ.எப்.டி. ஆலையில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு மற்றும் போனஸ், சம்பளம் உள்ளிட்ட நிலுவைத் தொகைகள் இது நாள் வரை தரவில்லை. இதனிடையே ஆலை வளாகம் சினிமா, சீரியல் சூட்டிங்குகளுக்கு வாடகை அளிக்கப்படுகிறது.
இதற்கு ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நிலுவைத்தொகை அனைத்தையும் வழங்கிய பிறகே வெளி ஆட்களை மில் வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி - கடலூர் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக தூண்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் செய்யும் பணிகள் ஆளை வளாகத்தில் நடக்கிறது.
இதனை கண்டித்து ஏஎப்டி ஒருங்கிணைந்த ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் முத்தமிழன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் உள்ளே நடந்த பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டன.
No comments