Breaking News

ஆனைக்காரன் சத்திரம் மற்றும் கோபால சமுத்திரம் ஊராட்சிகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சி உருவாக்குவதற்கு எதிர்ப்பு..

 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்கு உட்பட்ட ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சியில் உள்ள 14 வார்டுகள் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 10 வார்டுகள் என 24 வார்டுகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சியை உருவாக்கும் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆனைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம் ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்காமல் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பால் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கான 100 நாள் வேலை திட்டம், தொகுப்பு வீட்டு திட்டம் ஆகியவற்றை இழப்பதுடன், கூடுதல் வரி செலுத்தும் நிலையும் ஏற்படும் எனவே பேரூராட்சியாக மாற்றுவதற்கு இந்த பகுதியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமுமுக, மூமுக, விசிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 1000 ற்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி பொறுப்பு கோட்டாட்சியர் ரவி, காவல்துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையிலானோரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் இரண்டு ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியாக உருவாக்குவதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தப்படும் மேலும் இரு ஊராட்சிகளிலும் மக்களிடம் கருத்து கேட்ட பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.

No comments

Copying is disabled on this page!