Breaking News

கொம்பாக்கத்தில் ரூ.11 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்க்கட்சித் தலைவர் சிவா திறந்து வைத்தார்.

 


வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, கொம்பாக்கம் மாதா கோவில் வீதியில், புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் ரூ. 11 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

 இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தார். இதன் மூலம் கொம்பாக்கம் மாதா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.

இதில், தலைமைப் பொறியாளர் முனைவர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், செயற்பொறியாளர் உமாபதி, உதவிப் பொறியாளர் அன்பரசன், இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!