Breaking News

பிஆர்டிசி மேலாண் இயக்குநருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சுவார்த்தை தினக்கூலி மகளிர் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை !

 


புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 12 வருடங்களுக்கும் மேலாக தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா  தலைமையில் பிஆர்டிசி கூட்டுப் போராட்டக் குழுவினர் சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, தினக்கூலியாக பணியாற்றும் மகளிர் நடத்துனர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மேலாண் இயக்குநர் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, பிஆர்டிசி கூட்டுப் போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் திருக்குமரன், தொமுச நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜசேகர் மற்றும் மகளிர் நடத்துனர்கள் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!