பாரதிய ஜனதா கட்சியின் வில்லியனூர் மாவட்ட தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஓம் அனிதா பதவி ஏற்பு விழா..
பாரதிய ஜனதா கட்சியின் வில்லியனூர் மாவட்ட தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஓம் அனிதா பதவி ஏற்பு விழா வில்லியனூர் கோபால்சாமி நாயக்கர் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியை முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கனகராஜன் தொகுத்து வழங்க, மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.விழாவில் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழ் மாநில தேர்தல் இணைய அதிகாரி வெற்றி செல்வம் வழங்க, மாவட்ட தேர்தல் அதிகாரி தங்க விக்ரமன் உடனிருந்தார்.
மேலும் விழாவில் மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார்,மௌலிதேவன் உட்பட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments