சுரங்கபாதை பணி முழுமை பெறுவதற்கு முன், மக்கள் பயன்படுத்த துவங்கிய நிலையில அதிரடியாக மூடிய அதிகாரிகள்.
புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து கடலுார் செல்லும் நுாறடிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த ரயில்வே கேட் முழுதும் மூடப்பட்டது. ரயில்வே கேட் அருகில் வசிக்கும் மக்கள், மேம்பாலம் வழியாக கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் மூடப்பட்ட ரயில்வே கேட் கீழ், ரெடிமேட் கான்கீரிட் பிரிகாஸ்ட் முறையில் சுரங்கப் பாதை ரயில்வே துறை மூலம் அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே 10ம் தேதி சர்வீஸ் சாலை பணிகள் துவங்கியது. 10 மாதத்தில் முடிக்க வேண்டிய பணி இதுவரை முழுமை பெறவில்லை. மழையின் போது சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
சுரங்கபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், திறப்பு விழாவுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்படுத்த துவங்கி விட்டனர். பைக்குகளில் சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்கின்றனர். மின் விளக்குகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் சுரங்கப்பாதையில் வாயிலை அதிகாரிகள் அதிரடியாக மூடிஉள்ளனர்.
No comments