ரூ13.56 லட்சம் மதிப்பீட்டில் புதிய உணவு தானிய கிடங்கு கட்டடம்;-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.56 லட்சம் மதிப்பீட்டில் புதிய உணவு தானியக்கிடங்கு கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய தானிய கிடங்கு கட்டடத்தை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பொது மக்களுக்கு குடிமைப் பொருள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments