ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட குருமாம்பேட் பகுதியில் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்கம்பத்துடன் கூடிய மின்விளக்குகள்.
ஊசுடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமாம்பேட் முதல் பால்பண்ணை வரையிலான சாலைகளில் மின்விளக்கின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து ஊசுடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான சரவணன்குமாரின் நடவடிக்கையால் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட புதிய மின் கம்பத்துடன் கூடிய 120 வாட்ஸ் கொண்ட 37 மின்விளக்குகள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்து அர்ப்பணித்தார் .
இந்நிகழ்ச்சியில் பாஜக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments