Breaking News

அன்னை அஜ்மத் பீவி தர்ஹா 84 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா..

 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா கொடியேற்றும் விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம் 84 வது ஆண்டு கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது.அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் வருகிற 7 தேதி செவ்வாய்க்கிழமை இரவு புதன்கிழமை அன்று விடியற்காலை 4 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு கேரளா , ஆந்திரா பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சீடர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.

No comments

Copying is disabled on this page!