மேப்புலியூர் கிராமத்தில் அனுமதியின்றி கூழாங்கள் ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் அனுமதியின்றி கூழாங்கல் வெட்டி எடுத்து கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சனிக்கிழமை இரவு அந்த பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது மேப்புலியூர் கிராமத்தில் இருந்து நாச்சியார்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்திய பொழுது லாரியின் ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார் இதையடுத்து கனிம வளத்துறை அதிகாரிகள் அந்த லாரியை ஆய்வு செய்த பொழுது அதில் கூழாங்கல் இருந்தது தெரிய வந்தது மேலும் அனுமதி இன்றி கூழாங்கல் கடத்தப்பட்டது தெரியவந்த நிலையில் அந்த லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனர் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும் தெரிய வந்தது இதுகுறித்து கனிம பலத்துறை அதிகாரி ரகுநாத் குமார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார் தப்பி ஓடி தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்..
No comments