Breaking News

நள்ளிரவில் பரபரப்பு.. கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேரை உடனே பிடித்த சீர்காழி போலீசார்.

 


மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்த உண்டியல் பணம் 2 லட்சம் மீட்பு போலீசாரை கண்டதும் தப்பி ஓடி மற்றொரு வீட்டில் திருட முயன்ற நபரையும் நள்ளிரவில் மடக்கிப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மற்றும் போலீசாருக்கு குவியும் பாராட்டு.

சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நள்ளிரவு வெளிப்புறம் உள்ள சில்வர் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரவு ரோந்து சென்ற பேட்ரோல் போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமை காவலர் ஸ்டாலின் ஆகியோர் கோயில் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பி ஓடினார். அங்கே இருந்த மற்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் விசாரணையில் அவர்கள் சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கொளஞ்சி ( 42 )அவரது சகோதரர் முத்து (35) என்பது தெரியும் வந்தது. இவர்களிடம் இருந்து கோயில் உண்டியலில் கொள்ளையடித்த சுமார் 2 லட்சம் ரூபாய் மற்றும் காசுகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே உண்டியலை உடைத்து திருடிக் கொண்டிருந்தபோது போலீசாரை கண்டதும் கோயிலில் இருந்து தப்பி ஓடிய மூன்றாவது நபர் சீர்காழி விளந்திட சமுத்திரம் வில்வா நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளரை மர்ம நபர் தாக்கி இதில் லேசான காயம் அடைந்தார்.இதனை அறிந்த சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் காயத்ரி, காவலர் ரம்யா தனிப்பிரிவு காவலர் சார்லஸ் ஆகியோர் விளந்திடசமுத்திரம் பகுதிக்கு உடனடியாக நள்ளிரவில் சென்று தப்பி ஓடிய நபரை தேடினர் அப்போது அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்திருந்து விசாரணை செய்த போது அவர் விளந்திடசமுத்திரம் அஞ்சலை நகர் பகுதியை சேர்ந்த இலக்கியன் (29) என்பதும் தெரியவந்தது இந்த மூன்று பேரையும் கைது செய்த சீர்காழி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் சீர்காழி போலீசார் உடனடியாக பிடித்தது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது

No comments

Copying is disabled on this page!