இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வழக்கத்துக்கு மாறாக திறக்கப்பட்ட இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள்..
புதுச்சேரி மாநிலத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று மதுக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மாட்டு பொங்கலான இன்று பெரும்பாலோனோர் அசைவ உணவு செய்து வீடுகளில் படைப்பது இன்று வழக்கம்.
இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும், மீன் மார்க்கெட்டுகளும் வழக்கம்போல திறந்திருந்தன. மேலும் புதியதாக சாலையோர இறைச்சி கடைகளும் அதிகாலை முதலே திறக்கப்பட்டன.
அங்கு காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு இடங்களில் கோழி,ஆடு,மாடு போன்ற இறைச்சிகளின் விலை உயர்த்தி விற்கப்பட்டது.
இறைச்சிக் கடைகளை திறக்க கூடாது என அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இறைச்சி,மீன் விற்பனை நடைபெற்றது.
No comments