Breaking News

செல்வநாயகபுரம் நியாய விலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தொடங்கிவைத்தார்.

 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், நிர்வாகிகள் அருணகிரி, பாலசுப்பிரமணியன்,குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், நியாயவிலை கடை பணியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!