வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவர் C. S.குட்டி கோபி தலைமையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் வீரமங்கை வேலு நாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் தளபதி அமீன், மாவட்ட பொருளார் ரமேஷ், மாவட்ட இனை செயலாளர் அறிவரசன், ஓன்றிய தலைவர்கள் மனோகரன், கமல், ராஜா, ரவி, ஹரிஷ், ஆசிப் நகர தலைவர்கள் அம்பேத்கர், பாலாஜி மற்றும் மகளிர் அணி பொருப்பாளர்கள் சுஸ்மிதா, அர்ச்சனா, ரம்யா, தனம், பிரியங்கா, ஐஸ்வர்யா, தமிழ்கனி, பவித்ரா, கலையரசி, காவியா உள்ளிட்ட ஏராளமான த. வெ. க கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments