Breaking News

காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 67 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் டொயோட்டா சொகுசு கார் பறிமுதல்..

 


மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் மதுவிலக்கு மற்றும் அமல் பிரிவு பொறுப்பு துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் சீர்காழி மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயா தலைமையில் உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் தலைமை காவலர்கள் ராஜாராமன், சரவணகுமார், செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வைத்தீஸ்வரன் கோயில் ரயில்வே கேட் அருகே இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா எத்தியாஸ் TN 51 AE 1208 என் கொண்ட சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணான தகவலை சொன்னதன் பேரில் வாகனத்தை ஆய்வு செய்த போலீசார் அதிலிருந்த 180 மில்லி வகை கொண்ட 1200 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் காரை ஓட்டி வந்த நபர் பேரளம் அருகே இஞ்சிகுடி பகுதியைச் சார்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பதும் காரின் பதிவு எண்ணை மாற்றி ஒட்டப்பட்டதும் தெரியவந்தது. இதனிடையே கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள்,சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு காரை ஓட்டி வந்த விக்னேஷையும் சீர்காழி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். கடத்திவரப்பட்ட மதுபாட்டில் மதிப்பு சுமார் 67 ஆயிரம் என காவல்துறையினர் கூறினர். அந்த வாகனத்தில் பயன்படுத்திய எண் போலியான வாகன எண் என்பதும் தெரியவந்துள்ளது.

No comments

Copying is disabled on this page!