திருவள்ளுவர் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்,முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை..
திருவள்ளுவர் தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணகுமார் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது ஒருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments