மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி கிடைத்ததை வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டாம்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தட்சிணாமூர்த்தி இருந்து வந்தார். இவர் ஊராட்சியில் அதிக செலவினம் செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு கடந்த 27.10.24 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து தட்சிணாமூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்ஷிணாமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் ஊராட்சி தலைவராக தக்ஷிணாமூர்த்தி நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊராட்சி தலைவராக தக்ஷிணாமூர்த்தி மீண்டும் பணியில் தொடர அனுமதி வழங்கினார்.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீண்டும் பதவி பிரமாணம் செய்து தலைவர் பதவியை பெற்றதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி, சட்டநாதபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். பின்னர்ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார், வரும் 5-ம் தேதியுடன் ஊராட்சி தலைவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் முடிவடையுள்ள நிலையில் மூன்று தினத்தில் மீண்டும் பதவி ஏற்றது பரபரப்பாக பார்க்கப்பட்டது.
No comments