Breaking News

தைத்திருநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாடுவோம்; அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்..

 


தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாடுவோம் என கட்சியினருக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்தான் மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, காலை உணவு திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதிக வேலைவாய்ப்பு வழங்குவதிலும், அதிக தொழிற்சாலைகளை உருவாக்கியதிலும் அதிகப்படியான பெண் தொழிலாளர்கள் இருப்பதிலும் இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது. இவ்வாறு தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவபொங்கல் திருநாளாக கொண்டாடிட கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே தமிழர் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழங்கள் தோறும் சமத்துவ பொங்கல் வைத்து, திமுகவின் இருவண்ணக் கொடியை புதிதாக ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடுங்கள். மேலும், கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடிட கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!