Breaking News

கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

 


தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட மகளிர் அணி சார்பில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து கேக்வெட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளாகள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மண்டலத்தலைவர் கலைச்செல்வி, பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிடாலின், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, நாகராஜ், பிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், சுரேஷ், செல்வகுமார், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் கந்தசாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், சங்கரநாராயணன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், வழக்கிறஞர் அணி துணை அமைப்பாளர் ரூபஸ், மகளிர் அணி துணை அமைப்பாளர் நாராயணவடிவு, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, முனியசாமி, சுப்பையா, டென்சிங், ஜான்சன், முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், கருப்பசாமி, பொன்பெருமாள், பொன்ராஜ், கதிரேசன், ரவிந்திரன், முக்கையா, கங்காராஜேஷ், செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சரவணக்குமார், இசக்கிராஜா, ஜான்சிராணி, ரெக்ஸின், தெய்வேந்திரன், கந்தசாமி. பொன்னப்பன், மரியகீதா, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!