கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா: தூத்துக்குடி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
வாகைக்குளத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வாகைக்குளத்தில் தூத்துக்குடி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி பலவேசம், பொறியாளர் அணி சுரேஷ் கண்ணன், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளள் என்.முத்துலட்சுமி, ஒன்றிய அவைத்தலைவர் மாரியப்பன், துணைச் செயலாளர்கள் ஜெயராஜ், நாராயணன், பொருளாளர் சின்னராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கோபால், கணேசன், மாரிச்செல்வம், ஒன்றிய மகளிரணி பி.முத்துலட்சுமி, தொண்டரணி சங்கர், விவசாய தொழிலாளர் அணி மந்திரம், கலை இலக்கிய அணி கோபாலகிருஷ்ணன், இலக்கிய அணி ஆறுமுகம், வர்த்தகஅணி மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி முடிவை வசந்த், ஆதிதிராவிட அணி முருகேசன் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments