கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா: தூத்துக்குடி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
புதுக்கோட்டையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவில், தூத்துக்குடி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், ஹரிபாலகிருஷ்ணன், ஏஞ்சலின் ஜெனிட்டா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், வெயில்ராஜ், கலை இலக்கிய பேரவை தலைவர் பொன்னரசு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின், ஒன்றிய அவைத்தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய வழக்கறிஞரணி மகேந்திரன், இளைஞரணி சண்முக நாராயணன், மாணவரணி சற்குணம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், தொழிலாளர் அணி மொபட் ராஜன், தகவல்தொழில்நுட்ப அணி மணிகண்டன், மகளிர் அணி வரலட்சுமி மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments